மரண அறிவித்தல் - திருமதி நீலாம்பிகை ஐயாத்துரை

 


ஈழத்துக் கவிஞரும் ஆசுகவி என மக்களால் அழைக்கப்பட்டவரும், அநீதிகளுக்கு எதிரான குரலாக  சுதேச நாட்டியம் பத்திரிகையை 40 ஆண்டுகளுக்கும் மேலாக வெளியிட்டவருமான  கல்லடி வேலுப்பிள்ளையின் மரபுவழி வந்தவருமான திருமதி நீலாம்பிகை ஐயாத்துரை அவர்கள் தனது நூறாவது வயதிலே மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்து குப்பிழான் கிராமத்தில்  30.03.2026 திங்கட்கிழமை முற்பகல் இறைபதமெய்தினார்.



இரண்டாம் உலகப்போர் காலத்தில் விமான தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பாக  இருக்க பதுங்குகுழிகளில் இருந்த அனுபவங்களோடு, ஈழப்போரின் நேரடி சாட்சியமாகவும் இருந்தவர். 

பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், கொள்ளுப் பேரப்பிள்ளைகள் என நான்கு தலைமுறைகள் தாண்டிய  தலைமுறை கடந்து தொடரும் உறவுப் பிணைப்போடு, அயலவர்களோடும், நண்பர்களோடும் நேசமாக இருந்து சைவ சமய விழுமியங்களையும் இறுக்கமாக கடைப்பிடித்து வாழ்ந்தவர். 

மரண அறிவித்தல் -  திருமதி நீலாம்பிகை ஐயாத்துரை

வயாவிளானைப் பிறப்பிடமாகவும் குப்பிழான் தெற்கு வீரமனையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி நீலாம்பிகை ஐயாத்துரை அவர்கள் 30.03.2026 திங்கட்கிழமை முற்பகல் காலமானார். 

அன்னார் காலஞ்சென்றவர்களான இளையதம்பி - முத்துப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான நல்லதம்பி - தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும், 

காலஞ்சென்ற ஐயாத்துரை அவர்களின் அன்பு மனைவியும், 

கமலாம்பிகை, அமிர்தாம்பிகை, நகுலாம்பிகை, கதிர்காமத்தம்பி, பாலாம்பிகை, நேசாம்பிகை, கமலநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும், 

சரோஜினிதேவி (மலர்), பிரேமாவதி (பேபி), சுலோசனாதேவி, ராஜேஸ்வரி, திருமலர், கருணாநிதி,  சிவகருணை ஆகியோரின் பாசமிகு தாயாரும், 

சிவலிங்கம் (சிவம்), நடராஜா (சந்திரன்), தெய்வேந்திரன், ராசு, செல்வம், தயாளினி, கேமதி ஆகியோரின் அன்பு மாமியாரும், 

சிவரஞ்சனி, காலஞ்சென்ற சிவரூபன், லம்போதரன், ஞானகிருஷ்ணன் (ஞானன்), சிவப்பிரியா, சேரமான்,   நிரோசன், நிலக்சன், விதுசன், தவசீலன், சத்தியசீலன், கயசீலன், காலஞ்சென்ற சைந்தன்,  ஆரணி, ஆரூரன், அபீசன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியாரும் ஆவார். 

அன்னாரின் பூதவுடல் 30.03.2026 இல் இருந்து 02.04.2026 காலை வரை அன்னாரின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும். 

02.04.2026 வியாழக்கிழமை காலை 8 மணிக்கு குப்பிழானில் உள்ள அன்னாரின் இல்லத்தில் இறுதிக்கிரியைகள் இடம்பெற்று அதனை தொடர்ந்து பூதவுடல் குப்பிழான் தெற்கு காடகடம்பை மயானத்திற்கு தகனக் கிரியைக்காக எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். 

தகவல், 

குடும்பத்தினர்.


தொடர்புக்கு - 

சுலோசனா தேவி - மகள் - 0762891864





Post a Comment

Previous Post Next Post