குப்பிழான் சொக்கவளவு சோதி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் மாசி மாதம் 06 ஆம் திகதி நடத்துவதற்கு விநாயகப் பெருமானின் மெய்யடியார்கள் மற்றும் பரிபாலன சபையினர் இணைந்து தீர்மானித்துள்ளார்கள்.
எனவே மிக விரைவாக திருத்த வேலைகளை நிறைவு செய்து கும்பாபிஷேகத்திற்கு ஏற்றவாறு ஆலயத்தை புனரமைக்க வேண்டும். ஆகவே தொடர்ச்சியாக வேலைகள் இடம்பெற்று கொண்டிருக்கின்றன.
சகல வேலைகளையும் விரைவாக முடிவுறுத்துவதற்கு நிதி போதாமல் இருக்கின்றது.
எனவே குப்பிழான் மண்ணின் வெளிநாட்டு வாழ் உறவுகள் மற்றும் விநாயகப் பெருமானின் மெய்யடியார்கள் தங்களால் இயன்ற நிதி உதவிகளை ஆலய வங்கிக் கணக்கிற்கு அல்லது உங்கள் உறவுகள் மூலம் ஆலய பரிபாலன சபையிடம் ஒப்படைத்து அதற்குரிய பற்றுச்சீட்டுகளை பெற்றுக் கொள்ளுமாறு ஆலய பரிபாலன சபையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.



Post a Comment