தாயகத்திலும் புலத்திலும் சமூக மேம்பாட்டிற்காக தொடர்ந்து இயங்கிய வல்லிபுரம் அன்னலிங்கம் காலமானார்

 


தாயகத்திலும் புலத்திலும் சமூக மேம்பாட்டிற்காக தொடர்ந்து இயங்கிய வல்லிபுரம் அன்னலிங்கம்  காலமானார்.

குப்பிழானைப் பிறப்பிடமாகவும் டென்மார்க் கோல்பேர்க் நகரை வதிவிடமாகவும் கொண்ட திரு வல்லிபுரம் அன்னலிங்கம்  அவர்கள் 22/12/2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 

குப்பிழான் வீரமனையை பிறப்பிடமாகவும் டென்மார்க்கில்  நாஸ்கோ, கிலறோட், கொல்பேக் ஆகிய நகரங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்தார். 

டென்மார் வேல்முருகன் ஆலய ஸதாபர்களில் ஒருவரும்,  முன்னாள் தலைவரும், கொல்பேக் தமிழ் ஒன்றியத்தின் முன்னாள்  தலைவரும்,  நாஸ்கோ  தமிழ் சங்கத்தின் முன்னாள்  தலைவருமாவார். 

தாயகத்திலும், புலத்திலும் பல சமூக செயற்பாடுகளில் முன்னின்று உழைத்தவரும்,  பல ஏழை மாணாக்கர்களின்  சிறப்பான கல்வி எதிர்காலத்திற்காக முழுமையான தன் பங்களிப்பை வழங்கி உயர் பட்டம் பெற வைத்து மகிழ்ந்தவர்.  

இன்றும்  பல ஏழை மாணாக்கர்களுக்கு மட்டுமல்ல பல ஏழை மக்களுக்கு உதவி செய்து கொண்டு இறுதிக்காலம் வரை வாழ்ந்தவர்.

கடந்த சில மாதங்களாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் நேற்றுக் காலை இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28.12 .2025 திகதி ஞாயிற்றுக்கிழமை நேரம் 10 மணிமுதல் 2 மணி வரையில் கொல்பேக்கில்  நடைபெறும்.


Post a Comment

Previous Post Next Post