வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகால் ஏற்பாடு செய்யப்பட்ட பண்பாட்டுப் பெருவிழாவும், வடமாகாண எழுத்தாளர்களால் வருடா வருடம் வெளியிடப்படும் நூல்களுக்கான மாகாண விருது வழங்கலும், பாரம்பரியக் கண்காட்சியும் செவ்வாய்க்கிழமை (16.12.2025) முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியின் பொன்விழா மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
கடந்த ஆண்டு வெளிவந்த நூல்களில் இவ்வருடத்துக்கான தமிழ்வளர்ச்சி நூல்கள் துறைக்குரிய சிறந்த நூலாக "குப்பிழான் ஐ. சண்முகனின் இரசனைக் குறிப்புகள்" நூலுக்கான விருதினை குறித்த நூலின் தொகுப்பாளரான புனிதவதி சண்முகன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர், கூட்டுறவுத்துறைப் பிரதி அமைச்சர்உபாலி சமரசிங்க ஆகியோர் ஆளுநருடன் பிரதம விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.
மேலும், சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன், கௌரவ விருந்தினராக முல்லைத்தீவு மாவட்டச் செயலர் அ.உமாமகேஸ்வரன் ஆகியோரும், பெருந்திரளான கலைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.






Post a Comment