குப்பிழான் - விக்கினேஸ்வரா மகா வித்தியாலயம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை அங்கே குறைந்த வளப்பகிர்வுகளுக்கு மத்தியிலும் நிறைந்த கல்விச் செல்வம் ஊட்டிய ஆசிரியர்கள் அனைவரையும் ஆவணப்படுத்துவோம்.
விபரங்களைத் தெரிந்த குடும்பத்தினர், உறவினர்கள், ஊரவர்கள், நண்பர்கள் விக்கினேஸ்வராவில் கற்பித்த ஒவ்வொரு ஆசிரியரினதும்,
(1) முழுப் பெயர்
(2) பிறந்த காலம் & மரணமானால் மரணம் அடைந்த நாள்?
(3) ஆசிரிய தொழில் தொடங்கிய காலம்? - முடிவடைந்திருந்தால் முடிவடைந்த காலம்?
(4) நம்மூர் பாடசாலையில் படிப்பித்த காலங்கள்?
(5) அநேகமாக படிப்பித்த வகுப்புகள்?
(6) எமக்கு தெரியாத பின்னைய கால ஆசிரியராக இருந்தால் அவர் பற்றிய நல்ல விடயங்கள்? / ஆசிரியரைப் பற்றிய சிறு குறிப்பு
(7) அவரது படம்
ஆகியவற்றை 0094768545550 என்ற வாட்சப் இலக்கத்துக்கோ அல்லது kuppilanorg@gmail.com அல்லது tpkaran1@hotmail.com என்ற ஈமெயிலுக்கோ அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்கள் எல்லாம் சரிபார்க்கப்பட்டு தொகுக்கப்பட்டு www.kuppilan.org இணையத்திலும் பதிவேற்றப்பட்டு பின்பு அது ஒரு ஆவண நூலாகவும் வெளிவர உள்ளது.
முதலாவதாக குப்பிழான் விக்கினேஸ்வராவில் கல்வி கற்பித்த ஆசிரியர்கள் அனைவரையும் ஆவணப்படுத்துவதோடு அதனைத் தொடர்ந்து இரண்டாவதாக குப்பிழானின் ஆசிரியர்கள் அனைவரையும் ஆவணப்படுத்த வேண்டியுள்ளது.
ஆவணப்படுத்தல் என்பது ஊர்கூடித் தேரிழுக்கும் மாபெரும் பணி. அதில் குடும்பத்தவர்களில் இருந்து ஊரவர்கள் வரை அனைவரும் அக்கறை கொள்ள வேண்டியது அவசியமாகும்.
- சுவிஸிலிருந்து தர்மலிங்கம் - பிரபாகரன்



Post a Comment