குப்பிழான் தெற்கு அறிவொளி சனசமூக நிலைய முன்றலில் 26.11.2025 வியாழக்கிழமை மாலை மாவீரர் தினம் பேரெழுச்சியுடன் அனுட்டிக்கப்பட்டது.
அறிவொளி சனசமூக நிலையத் தலைவர் இராசையா தேவநேசன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வை சனசமூக நிலையத்தின் செயலாளர் அந்தோனிப்பிள்ளை மரியசீலன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.
மாவீரர் பாலையன் நிமால் (வரப்பிரகாசம் சுரேந்திரன்) அவர்களின் தாயார் வரப்பிரகாசம் றீற்றம்மா அவர்கள் பிரதான சுடரை ஏற்றினார்.
தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் உறவுகளை நினைத்து கண்ணீர்மல்க தீபமேற்றி அஞ்சலி செலுத்தியதுடன், மலரஞ்சலியும் செலுத்தினர்.
குப்பிழான் தெற்கு அறிவொளி சனசமூக நிலைய பகுதியில் மட்டும் 26 மாவீரர்கள் தங்கள் இன்னுயிரை தேசத்துக்காக அர்ப்பணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
.jpg)
Post a Comment