பிறப்பு 03/01/1912
இறப்பு 10/10/1957
ஆசிரிய தொழில் ஆரம்பம் - நாவலப்பிட்டி தமிழ் பாடசாலை
-பின்னர் மயிலணி பாடசாலை
-மிகச் சிறிது காலம் - குப்பிழான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயம்
-இறுதியாக ஊரெழு கணேசா வித்தியாசாலை
படிப்பித்தல் - கணித பாடம் - 6 to - SSC
குப்பிழான் காளி கோவிலடியை சேர்ந்த காளி தேவியின் மீளா அடியவரான கதிரிப்பிள்ளை ஆசிரியர் கண்டிப்புடன் கூடிய, அற்புதமாக கணிதத்தைக் கற்பிக்க கூடிய ஆசிரியராவார்.
கணிதத்தை அதிவிரைவாகக் கணிப்பதில் அசாத்திய திறமை கைவரப் பெற்றவர்.
ஆங்கிலேயர் அவரின் திறமையை பரிசோதிக்கும் விதமாக கணிப்புப் பொறியில் (calculator) கணக்குப் பார்ப்பதா அல்லது அவரின் மனக்கணக்கா விரைவானது எனச் சோதித்து, அவர் அதி விரைவாக கணித்தற் பொறியை விட விரைவாகக் கணித்ததைக் கண்டு அதிசயித்து கணித மேதை என பட்டமளித்துக் கெளரவித்தனர்.
ஆங்கிலேயரால் லண்டனுக்கு வருமாறு Scholarship இல் அழைக்கப்பட்டார். ஆயினும் குடும்பத்தில் ஒரே பிள்ளை என்பதால் அந்த வாய்ப்பை மறுத்து பெற்றோருடன் இருந்துள்ளார்.
நல்லம்மா அவர்களை மணமுடித்து அமரர் தங்கவேல் மற்றும் 5 மகள்களை பெற்றதுடன் ஆசிரியர்களாக, உயரதிகாரிகளாக அவரின் பிள்ளைகள் விளங்கியதுடன் அவரின் பேரப்பிள்ளைகள் இருவர் வைத்திய நிபுணர்களாக, இருவர் பொறியியலாளராக, வங்கியாளராக, அதிபராக, ஆசிரியராக விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவரின் நினைவாகவும் இவரின் மகன் குப்பிழான் அபிமானி அமரர் திரு தங்கவேல் அவர்கள் நினைவாகவும் எமது பாடசாலையில் அழகிய நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இலங்கையிலிருந்து சேது-


Post a Comment