குப்பிழான் விக்கினேஸ்வரா முன்பள்ளியினர் ஏற்பாடு செய்து நடாத்தும் மழலைகளின் கலைவிழா-2025 ஞாயிற்றுக்கிழமை (12.10.2025) காலை-09 மணி முதல் சனசமூக நிலைய மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமூக நிலையத் தலைவர் சுப்பிரமணியம் சுதாகரன் தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்வில் உடுவில் கோட்டக் கல்வி முன்பள்ளி இணைப்பாளர் திருமதி.கார்த்திகா மோகன்ராஜ் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார்.
இதேவேளை, மேற்படி நிகழ்வில் அனைவரையும் தவறாது சமூகமளித்து மழலைகளின் நிகழ்வுகளைக் கண்டுகளிக்குமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.


Post a Comment