குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயத்திலிருந்து சென்ற வருடம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றி வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கான தினக்குரல் பத்திரிகையின் கல்விக்குரல் பிரிவினால் கெளரவிப்பு நிகழ்வு அண்மையில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்வில் சாதனை படைத்த மாணவிகளான செல்வி. ஷகானா மதனமோகனராஷ் (152 புள்ளிகள்), செல்வி பிரியா றஞ்சித்குமார் (139 புள்ளிகள் ) ஆகியோர் கெளரவிக்கப்பட்டனர்.
பாடசாலைக்கான விருதினை யாழ் அரச அதிபர் திரு . பிரதீபன் அவர்களிடம் இருந்து வகுப்பாசிரியர் திருமதி. வலன்ரீனா இளங்கோவன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.



Post a Comment