கன்னிமார் கௌரி அம்பாள் ஆலய மகா கும்பாபிஷேகப் பெருவிழா - நிறைவுக் கட்டத்தில் திருப்பணி வேலைகள்

 


குப்பிழான் தெற்கு கன்னிமார் கௌரி அம்பாள் ஆலய மகா கும்பாபிஷேகப் பெருவிழாவை முன்னிட்டு ஆலயத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த திருப்பணி வேலைகள் நிறைவுக் கட்டத்தை எட்டியுள்ளன. 

இன்று வர்ணம் பூசும் வேலைகளிலும், கன்னிமார் ஆலய முன்றலில் கும்பாபிஷேக யாகப் பந்தல் அமைக்கும் பணிகளும் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன. 

நேற்றிரவு ஆலய சுற்றாடலை தூய்மையாக வைத்திருக்கும் வகையில் சிரமதானப் பணிகளும் இடம்பெற்றன. 

இன்று இரவு கும்பாபிஷேக சுபமுகூர்த்தப் பத்திரிகையினை கிராமமெங்கும் ஓட்டும் பணியினை பரிபாலன சபையினர் முன்னெடுத்துள்ளனர். 

நாளை வியாழக்கிழமை காலை 5.30 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் கர்மாரம்ப நிகழ்வுகள் ஆரம்பமாகின்றன.  

வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு விநாயகர் வழிபாடு ஆரம்பம் 

சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை அடியவர்கள் அம்பாளுக்கு எண்ணெய் காப்பு சாத்த முடியும். 

ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் 8.10 வரையான சுப முகூர்த்தத்தில் மகா கும்பாபிஷேகம் இடம்பெறும்.


Post a Comment

Previous Post Next Post