கன்னிமார் கௌரி அம்பாளின் முழுமையான கும்பாபிஷேக பத்திரிகையை பார்வையிட இங்கே அழுத்தவும்
கன்னிமார் கௌரி அம்பாள் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகப் பெருவிழாவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் குப்பிழான் வாழ் ஊர் மக்கள் மற்றும் புலம்பெயர் உறவுகளின் கூட்டுப் பங்களிப்புடன் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
வியாழக்கிழமை காலை 5.30 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் கர்மாரம்ப நிகழ்வுகள் ஆரம்பமாகின்றன.
வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு விநாயகர் வழிபாடு ஆரம்பம்.
சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை அடியவர்கள் அம்பாளுக்கு எண்ணெய் காப்பு சாத்த முடியும்.
ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் 8.10 வரையான சுப முகூர்த்தத்தில் மகா கும்பாபிஷேகம் இடம்பெறும்.
கும்பாபிஷேக நிகழ்வுகளில் பங்கேற்கும் அடியவர்களுக்காக வெள்ளி, சனி, ஞாயிறு தினங்களில் ஆலயத்தில் அன்னதானப் பணிகளும் முன்னெடுக்கப்பட உள்ளன.
Post a Comment