யாழ் புன்னாலைக்கட்டுவன் ஆயாக்கடவை சித்திவிநாயகர் ஆலய விசுவாவசு வருட மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா இன்று புதன்கிழமை (09.07.2025) வெகுசிறப்பாக இடம்பெற்றது.
இன்று காலை-06 மணியளவில் விசேட அபிஷேக ஆராதனைகள் ஆரம்பமானது. வசந்தமண்டபப் பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து விநாயகப் பெருமான் உள்வீதியில் திருநடனத்துடன் எழுந்தருளி உலா வந்து சித்திரத் தேரில் ஆரோகணித்தார்.
சிதறு தேங்காய்கள் உடைக்கப்பட்டு, விசேட தீபாராதனை வழிபாடுகளைத் தொடர்ந்து அடியவர்களின் அரோகராக் கோஷம் முழங்க, ஆண், பெண் அடியவர்கள் வடம் தொட்டிழுக்க முற்பகல்-10.30 மணியளவில் சித்திரத் தேர்ப் பவனி ஆரம்பமானது.
புன்னாலைக்கட்டுவன் வாழ் உறவுகள் புலம்பெயர் உறவுகளும், அயல்கிராமங்களான ஊரெழு, வசாவிளான், குப்பிழான், ஏழாலை போன்ற அயல் ஊர்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான அடியவர்கள் இவ் ஆலயத் தேர்த் திருவிழாவில் கலந்து கொண்டனர்.
Post a Comment