யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மைய மண்டபத்தில் இடம்பெற்ற சைவப்புலவர் பரமேஸ்வரன் ஆசிரியரின் மணிவிழாவும் மலர் வெளியீடும்
யாழ்.வயாவிளான் மத்திய கல்லூரியில் தமிழை அழகியலோடு கற்பித்த புன்னாலைக்கட்டுவனில் வாழ்ந்து வரும் செல்லையா பரமேஸ்வரன் ஆசான் அவர்களின் மணிவிழா நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மைய மண்டபத்தில் திங்கட்கிழமை (02.06.2025) மாலை இடம்பெற்றது.

இந் நிகழ்வில் நாங்கள் வயாவிளான் மத்திய கல்லூரியில் கல்வி கற்ற போது அதிபராகவிருந்த க.கனகராசா அவர்கள் , ஆசான்கள் மற்றும் பழைய மாணவர்கள் சிலருடன் இணைந்து வாழ்த்திய இனிய தருணம்....என்றென்றும் என் வாழ்வில் மறக்க முடியாத நற்தருணம்.
தாய்மொழியாம் தமிழை நாம் நேசிக்கவும், பிழையின்றி எழுதவும் பரமேஸ்வரன் ஆசான் கற்பித்த பாங்கு இன்றும் கண்களில் நிழலாடுகிறது. நினைவில் வந்து போகிறது.... பரமேஸ்வரன் ஆசான் எமக்குத் தமிழைத் தப்பின்றிப் புகட்டியது மாத்திரமன்றி, அவர் பாடசாலையின் நிகழ்வுகள் பலவற்றில் ஆற்றிய பல உரைகள் மூலம் சைவசமயத்தின் மீதான ஈடுபாட்டை அதிகரித்தமை, நற்பழக்கங்கள் புகட்டியமை எனச் சொல்லிக் கொண்டே போகலாம். அத்துடன் மாணவர்கள் பலருக்கும் வழிகாட்டியாகவும் எங்கள் ஆசான் விளங்கினார்.
இன்றைய நாளில் இந் நிகழ்வில் எங்களுக்குக் கற்பித்த ஆசான்கள் பலரை ஒருசேரக் கண்டு அவர்களுடன் கலந்துரையாடிய போது மீண்டும் அந்தப் பசுமையான பள்ளிக் காலத்திற்கே அழைத்துச் செல்வதாக இருந்தது.
செ. ரவிசாந்-
கடந்த ஒன்பது வருடங்களுக்கு மேலாக ஏழாலை ஸ்ரீமுருகன் வித்தியாலயத்துக்கு தன்னை அர்ப்பணித்து சேவையாற்றி ஓய்வுபெறும் அதிபருக்கு பாடசாலை சமூகம் முன்னெடுத்த சேவைநலன் பாராட்டு விழா
யா/ஏழாலை ஸ்ரீமுருகன் வித்தியாலய அதிபராக பணியாற்றி 30.05.2025 இல் இருந்து அதிபர் சேவையில் இருந்து ஓய்வுபெறுகின்ற சைவப்புலவர் செல்லையா பரமேஸ்வரன் அவர்களின் சேவைநலன் பாராட்டு விழா பாடசாலையில் சிறப்பாக நடைபெற்றது.
இவரின் ஓய்வுகாலம் சிறப்பாக அமைந்து தொடர்ந்து சமயப்பணி, சமூகப்பணி செய்ய வாழ்த்துகளை பாடசாலை சமூகத்தினர் தெரிவித்துக் கொண்டனர்.
ஆசிரியராக அதிபராக சேவைகளை பாராட்டி ஊடகங்களில் வெளிவந்த மணிவிழா வாழ்த்து மடல்
![]() |
உதயன் 02.06.2025 Uthayan epaper Link |
Post a Comment