மரண அறிவித்தல் - அமரர் சண்முகம் சதானந்தன்



யாழ்.குப்பிழான் மண்ணைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பொறியியலாளர். சண்முகம் சதானந்தன் (சண்முகம் வாத்தியாரின் மகன்) அவர்கள் (23.08.2026) ஞாயிற்றுக்கிழமை அன்று 72 ஆவது வயதில் கனடாவில் காலமானார். 


இவர் Eekai Foundation தொண்டு நிறுவனத்தின் இயக்குனரும் ஆவார். 

அன்னாரின் பூதவுடல் 27.08.2026 வியாழக்கிழமை மதியம் 1 மணி தொடக்கம் 4 மணி வரை  கனடா ஒன்ராறியோவில் உள்ள ajax crematorium & visitation centre  (384 Finley Avenue, Ajax, ON, Canada, L1S 2E3) இல் பார்வைக்கு வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகள் இடம்பெற்று பிற்பகல் 4 மணிக்கு தகனம் செய்யப்படும். 

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். 

தகவல் - குடும்பத்தினர் 

-----------------------------------------------------------------------------------------
குப்பிழான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றம் - கனடா, இதன் தலைவராக இருந்து பல்வேறு சேவைகளையும் ஆற்றியவர். 



-------------------------------------------------------------------------------------------

அன்றொரு காலம்


குப்பிழான் கிராமத்தின் இளைஞர்கள் குழுவினை தமது நட்பு வட்டத்தினுள் வைத்திருக்கும் அதீத ஆளுமை படைத்த ஓர் இளைஞன்.
கிராமத்தவர்களின் இனிய நண்பன்----
"சதா" (அமரர் .திரு.சண்முகம் -சதானந்தன்).
1975ம் ஆண்டு.
கிராம மண்ணை விட்டு, தமது மேல் படிப்புக்காக இங்கிலாந்துக்கு பயணமாகின்றார்.
கிராமத்தில் அவரது வீட்டிலிருந்து அவரை சைக்கிளில் ஏற்றி கௌரவமாக கொழும்புக்கு அனுப்பி வைப்பதற்காக மல்லாகம் புகையிரத நிலையம் வரை கிராமத்தின் இளைஞர்கள் பட்டாளம் கூடவே சென்ற அந்த காட்சி ---------?
அது "நினைவில் நிழலாடும் பசுமையானதோர் நினைவு"
இன்று அவரது 72 வயதில் அவர் இல்லை.
இன்னும் கொஞ்ச காலம் வாழ்ந்திருக்கலாமே என்றதொரு ஏக்கம்.
காலம் வந்து விட்டது. எப்போதோ நிர்ணயிக்கப்பட்ட விதி.
அன்று இங்கிலாந்துக்கு மகிழ்வோடும் நகைசுவை விளையாட்டுகளுடனும் அனுப்பி வைத்தோம்.
இன்று அவரது புனித ஆத்மாவின் தொடர் பயணத்துக்கு துயரத்துடன் அனுப்பி வைப்போம்.
சிவ பஞ்சலிங்கம்-



Post a Comment

Previous Post Next Post