குப்பிழான் விக்கினேஸ்வரா முன்பள்ளி மாணவர்களின் கலைவிழா நிகழ்வுகள் 12.10.2025 ஞாயிற்றுக்கிழமை விக்கினேஸ்வரா சனசமூக நிலையத் தலைவர் சுதாகரன் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
பிரதம விருந்தினராக திருமதி.கார்த்திகா மோகன்ராஜ் (உடுவில் கோட்ட முன்பள்ளிகள் இணைப்பாளர்) அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டு விழாவினை மேலும் சிறப்பாக்கியிருந்தனர்.
இதில் முன்பள்ளி மாணவர்கள் நடனங்கள், பாட்டுகள், பேச்சு என தங்களின் திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.
இதற்கான நிதிப்பங்களிப்பாக கனடாவைச் சேர்ந்த குப்பிழான் மண்ணின் பற்றாளனும், சமூக சேவகருமாகிய நா.பாலசுப்பிரமணியம் (அப்பன் அண்ணா) அவர்கள் 50,000 ரூபா முன்பள்ளி நிர்வாகத்தினரிடம் ஒப்படைத்திருந்தார்.
சிற்றுண்டிச் செலவு எமது சனசமூக நிலைய உறுப்பினராகிய திரு.ஜெ.ஜெயசதாத் அவர்களும், ஒலியமைப்புக்கான செலவு அக்சயா ஹாட்வெயர் உரிமையாளராகிய திரு.சி.அமணன் ஆகியோரும் வழங்கியிருந்தனர்.



Post a Comment