(குப்பிழான் மண்ணின் முதன்மையான ஆலயமான கற்கரை கற்பக விநாயகப் பெருமானை தன் பொற்கரங்களால் பூஜை செய்து, கிராம மக்களுக்கும் மூத்த குருவாக விளங்கிய குமாரராஜக்குருக்கள் அவர்களின் ஆத்மா இறைவனின் திருப்பாதங்களை அடைய குப்பிழான் வாழ் மக்களின் ஆழ்ந்த அஞ்சலிகள்.)
"ஓம் கம் கணபதயே நமஹா"ஓம் மகா கணபதியே நமஹ
"சுக்லாம் பரதரம் விஷ்ணும், சசிவர்ணம் சதுர்புஜம்,
ப்ரஸன்னவதனம் த்யாயேத் சர்வ விக்னோபசாந்தயே."
"கஜானனம் பூத கணாதி ஸேவிதம் கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம் உமாஸுதம் சோக வினாச காரணம் நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்"
முன்னொரு காலம் குப்பிழான் - கற்கரை கற்பக விநாயகர் ஆலயத்தின் பூஜை நேரங்களில் மூலஸ்தானத்திலிருந்து கணீர் என்ற குரலில் ஒலிக்கும் இவ் கணபதி மந்திரங்கள்,
அந்த ஆலய மண்டபம் முழுவதும் எதிரொலிக்கும்.
இன்று இருப்பது போல் அந்த காலங்களில் ஆலயத்தில் மின்னொளியின் பிரகாசங்கள் இருப்பதில்லை. புனிதமான இருட்டறையில் இருக்கும் ஆதிமூல பெருமானுக்கு அருகே பூஜை அர்ச்சகரை தவிர எவரும் செல்லமுடியாது. சற்று தூரமாக ஆலயத்தினுள் நின்று, தீப ஒளியில் மட்டும் எம்பெருமானை தரிசனம் பெறலாம்.
அந்த கணீர் என்ற கணபதி மந்திரத்தின் சிம்ம குரலுக்குரியவரே இன்று பரலோகத்துக்கு அழைக்கப்பட்ட பெரும் போற்றுதலுக்குரிய
"பிரம்மஸ்ரீ குமாரராஜ குருக்கள் ஐயா" (குமார் ஐயர்) ஆவார்.
![]() |
குமாரராஜக்குருக்கள் தம்பதிகளாக |
இணுவில் ஊரை பூர்வீகமாக கொண்ட குமார் ஐயா அவர்கள் 1966-1967ம் ஆண்டுகளில் முதன் முதலில் குப்பிழான்- கற்கரை கற்பக விநாயகர் ஆலயத்திற்கு அர்ச்சகராக வருகை தருகின்றார்.
அதன் பின்பு அவர் குப்பிழான் கிராமத்து மக்களின் அன்பை பெற்று கிராமத்துள் ஒருவராகவே போற்றப்பட்டு வந்தார்.
* கருணை கொண்ட முக வசீகரம்.
* ஆத்மீக அலையினை தம்மோடு என்றும் எடுத்து செல்லும் தோற்றம்.
* எவருடனும் பகைமை கொள்ளாது அணைத்து செல்லும் சுபாவம்.
* சிறு சிறு சலசலப்புகளின் மன கசப்புகளினால் தூரமாக செல்பவர்களையும் தேடி சென்று
விபூதி வழங்கி அரவணைக்கும் மனித நேயங்கள்.
இவைகள் யாவும் அவரது சுபாவங்கள்.
1972 -1973ம் ஆண்டுகளில் ஆலயத்தின் மூலாதார பகுதிகள் சேதமடைந்து கொண்டு செல்வதால் அதனை புனரமைப்பு செய்வதற்காக தாமே முன் நின்று, கிராமத்தவர்களிடம் நிதி சேகரித்து, புனரமைப்பு செய்யும் தொழிலாளிகளுடன் தானும் ஒருவராக நின்று தோள் கொடுத்து, நிர்மாண பணிகளை முடித்து, சிறப்பாக மஹா கும்பாவிஷேகமும் நடாத்தி முடித்தது அந்த காலத்தில் ஓர் சாதனையாகும்.
1973ம் ஆண்டு காலத்தில் மலேசியாவிலிருந்து வருகை தந்த எம் செம்மண்ணவர் திரு.கா.நல்லையா அவர்கள் ஆலய பரிபாலன சபை தலைவராக பொறுப்பு எடுக்கின்றார். அவரது தலைமை காலங்கள் என்பது ஆலயத்தின் பொற்காலமாகும்.
![]() |
குமாரராஜக்குருக்கள் தம்பதிகளாக |
ஆலயத்தினூடாக கிராமம் எங்கும் ஆத்மீக அலையினை தொடர்ந்து வீச வைப்பதில் குமார் ஐயாவும் உற்ற துணையாக செயல்படுகின்றார்.
என்னவோ? இயற்கையின் நியதி.
அவர் ஆத்மாவின் தொடர் பயணத்துக்கு இன்று அவரது சொந்த ஊரான இணுவில் மண்ணிலிருந்து அழைக்கப்பட்டு விட்டார்.
குப்பிழான் கிராமத்தவர்களாகிய நாம் அனைவரும் போற்றுதலுடன் அவரின் புனித ஆத்மாவினை அனுப்பி வைப்போம்.
சிவ பஞ்சலிங்கம் -
Post a Comment