தமிழ்மக்களின் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்குவதற்கும் தமிழினத்தை அழிப்பதற்கும் ஏனைய சிங்களக் கட்சிகளை விடவும் அதி தீவிரமாக வேலை செய்த கட்சி ஜே.வி.பி என்கிற என்.பி.பி கட்சியாகும்.
தமிழ்த் தேசியக் கட்சிகளின் பொது எதிரியாக விளங்கும் தேசிய மக்கள் சக்தி தமிழ்மக்களை சிங்கள பெருந்தேசியவாதத்துக்குள் கரைப்பதற்காகவே உள்ளூராட்சித் தேர்தலிலும் அது கடுமையாக வேலை செய்கிறது.
கடந்த பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்குப் பிறகு தமிழ்த் தேசிய நீக்க அரசியலை செய்யலாம் என்கிற நம்பிக்கை ஜே.வி.பிக்கு வந்து விட்டது அந்த நம்பிக்கையை உடைக்க வேண்டிய தேவை தமிழ்த் தேசியக் கட்சிகளின் கடமையாக இருக்கிறது.
தேசிய மக்கள் சக்திக்கு ஏன் வாக்களிக்கக் கூடாது என்பதில் தமிழ்மக்கள் உறுதியாக இருக்க வேண்டும்.
Post a Comment