சொக்கவளவு சோதிவிநாயகர் தேர்த் திருவிழா வெகுவிமரிசை

 


யாழ். குப்பிழான் சொக்கவளவு சோதிவிநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா வெள்ளிக்கிழமை(16.06.2023) சிறப்பாக நடைபெற்றது.


காலை-08.30 வசந்தமண்டபப் பூசை வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து பஞ்சமுக விநாயகப் பெருமான், வள்ளி- தெய்வயானை சமேத முருகப் பெருமான் ஆகிய தெய்வங்கள் உள்வீதியில் திருநடனத்துடன் எழுந்தருளி அதனைத் தொடர்ந்து காலை-10 மணியளவில் சித்திரத் தேர்களில் ஆரோகணித்தனர்.


சேந்தனார் அருளிய திருப்பல்லாண்டு பண்ணுடன் ஓதப்பட்டு, சிதறு தேங்காய்கள் உடைக்கப்பட்டதைத் தொடர்ந்து அடியவர்களின் அரோகராக் கோஷம் முழங்க சித்திரத் தேர்களின் பவனி ஆரம்பமானது. பிரதான சித்திரத் தேரினை ஆண் அடியவர்கள் ஒரு புறமும், பெண் அடியவர்கள் மறுபுறமும் வடம் தொட்டிழுத்தனர்.

இதேவேளை, கொளுத்தும் வெயிலுக்கு மத்தியிலும் இவ் ஆலயத் தேர் பவனியில் நூற்றுக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

செ.ரவிசாந்-    


                     

Post a Comment

Previous Post Next Post