குப்பிளான் சந்தி வெறுஞ்சந்தியாச்சய்யா!

 


படித்தவரும் பாமரரும் பேதமின்றிக் கூடிநிற்பர் 

மது அருந்தி வந்தோரும் மறைந்தங்கு சேர்ந்திருப்பர்

களைத்துவரும் கமக்காரர் களைப்பாற அமர்ந்திருப்பார் 

இளவயதுக் கற்பனையில் இளைஞர் பலர் கூடி நிற்பார் - ஆனாலும் 

ஏழை செல்வன் பேதமின்றி எல்லோரும் அங்கிருப்பர்

குழப்ப நிலை வந்தாலும் 

குறையின்றி தீர்க்கவொரு கூட்டமொன்று அங்கிருக்கும் 

அன்று கண்டநிலை இன்று எப்படித்தான் மறைந்ததைய்யா

நாய் கூட இல்லாத வெறுஞ் சந்தி ஆச்சுதையா!


கவியாக்கம் - திரு. இ. சி. தெட்சிணாமூர்த்தி,

ஓய்வுநிலை கிராம உத்தியோகத்தரும் சமாதான நீதவானும்,

குப்பிழான்.


Post a Comment

Previous Post Next Post