கன்னிமார் கெளரியம்பாள் கும்பாபிஷேக தின சங்காபிஷேகம்

 

குப்பிழான் தெற்கு வீரமனை கன்னிமார் கெளரியம்பாள் ஆலயத்தின் கும்பாபிஷேக தினத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் வெள்ளிக்கிழமை (07.07.2023) காலை-09 மணியளவில் கும்ப பூசை, விசேட பூசை வழிபாடுகளுடன் ஆரம்பமாகி மிகவும் பக்திபூர்வமாக இடம்பெற்றது.

1008 சங்காபிஷேகத்தைத் தொடர்ந்து வசந்த மண்டபப் பூசையும், திருவூஞ்சல் வழிபாடும் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து அடியவர்கள் புடைசூழ அம்பாள்  அலங்கார நாயகியாக உள்வீதி, வெளிவீதி உலா வரும் திருக்காட்சியும் நடைபெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

செ. ரவிசாந்- 

Post a Comment

Previous Post Next Post