தைப்பொங்கல் நாளான 15-01-2019 புதன்கிழமை மாலை 3.30 மணிக்கு குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமூக நிலையத்தில் நிலைய தலைவர் திரு. பொ.விஜே தலைமையில் பொங்கல்விழாவும் கலை நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது. இதன்போது சான்றோர்கள் கெளரவிப்பு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்வியில் சிறந்து விளங்கிய மூத்தோர்களான
திரு.கந்தப்பு சுப்பிரமணியம்
திரு.நல்லதம்பி சிவலிங்கம்
ஆகியோர் மண்டபம் நிறைந்த மக்கள் முன்னிலையில் சிறப்பாக கெளரவிக்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டனர்.
திரு.நல்லதம்பி சிவலிங்கம்
குப்பிழான் வடக்கில் விவசாயியின் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து ஆரம்ப கல்வியினை குப்பிழான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றவர்.
தனது பாடசாலை பருவத்திலேயே குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமூக நிலைய செயலாளராக பதவி வகித்தவர். குப்பிழான் மண்ணிலிருந்து மூன்றாவது கலைப்பீட பல்கலைக்கழக மாணவராக பேராதனை பல்கலைக்கழகத்திற்கு சென்று 1963-1966 வரை கல்வி கற்று கலைப்பட்டதாரியாக பட்டம் பெற்றவர்.
1981 ஆம் ஆண்டு பட்டதாரி பயிற்சியாளராக தெரிவு செய்யப்பட்டு சுன்னாகம் ப.நோ.கூ.சங்கத்தின் உதவி பொது முகாமையாளராக பணிபுரிந்து 1972 ஆம் ஆண்டு பொது முகாமையாளராக பொறுப்பேற்று பணிபுரிந்தார். நாட்டு பிரச்சனை காரணமாக 1997 ஆம் ஆண்டு ஆனி மாதம் சுயவிருப்பின் காரணமாக ஓய்வு பெற்றார்.
குப்பிழான் வடக்கு பிரதேசத்தில் மக்களை மீள்குடியேற்றம் செய்ய முன்னின்று பாடுபட்டு மக்களை மீள்குடியேற்றுவதற்கு அயராது பாடுபட்டு அனுமதியை பெற்றுத்தந்தவர்.
பேராசிரியர். கந்தப்பு பாலசுப்பிரமணியம்
இவர் குப்பிழானில் பிறந்து தனது ஆரம்ப கல்வியை குப்பிழான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தில் கற்றதுடன் உயர் கல்வியை யாழ்ப்பாணம் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியிலும் கற்றார். சிறந்த உதைபந்தாட்ட வீரரான இவர்1959 ஆம் ஆண்டு 2 ஆம் பிரிவில் கப்டனாகவும் இருந்து முதலாம் பிரிவிலும் விளையாடியுள்ளார்.
சிறிலங்கா பிளாஸ்ரிக் - இறப்பர் நிறுவகத்தின் சிறப்பு சேவை விருது பெற்றதுடன் 2007 ஆம் ஆண்டு தை மாதம் 18 ஆம் திகதி கொழும்பு ஹோட்டல் திரான்ஸ் ஏசியாவில் நடந்த விழாவில் கெளரவிக்கப்பட்ட சிறந்த கல்விமான் ஆவார்.
பின்னர் இறப்பர் தொழில்நுட்ப டிப்ளோமா ( A.N.C.R.T) படிப்பையும் MSC (பிளாஸ்டிக் இறப்பர் துறை) படிப்பையும் லண்டன் வடக்கு பல்கலைக்கழகத்திலும் முடித்தவர். மேற்கிந்திய தீவுகளில் ஒன்றான பிரிட்டிஸ் கயானாவில் நான்கு வருடங்கள் ஆய்வு உத்தியோகத்தராகவும் இருந்த போது பலாட்ட எனும் இறப்பர் போன்ற தாவரப்பொருள் ஐந்து அந்நாட்டு தேசிய விருதுகள் (Patents) பெற்றுள்ளமையும் சிறப்பாக குறிப்பிடப்பட வேண்டியதாகும்.









Post a Comment